நான் விஜயசாரதி. என்னை தொலைக்காட்சி பெட்டியினுள் பார்த்து இருப்பீர்கள். இல்லை என்றாலும் தவறில்லை. இந்த என் ப்லாக் மூலம் தொடர்பது கொள்ளக்கூடாதா என்ன?
நான் சிறு வயதில் நடந்ததைவிட, வளர்ந்த பின் நடந்தது தான் இன்று பலருக்கும் என்னை அடையாளம் காட்ட வைத்துள்ளது. நடத்தை சரி இல்லாதவன் என்றும் கூட சொல்ல சிலருக்கு தோன்றும். காரணம் நான் சன் தொலைக்காட்சியின் நீங்கள் கேட்ட பாடல் என்ற நிகழ்ச்சியின் மூலம் பின்னால் நடந்தே இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்னை பொறுத்தவரை, இது எனக்கு ஒரு பெருமையான விஷயம்தான்.
இது ஒரு விளம்பர முயற்சி அன்று. என்னை பற்றிய அறிமுகம் மட்டுமே. நான் நம்பும் கடவுள் எனக்கு அளித்துள்ள என் பிறந்ததின பரிசே, நான் மறைந்த நடிகர், ( தேசிய நடிகர் என்றும் அழைக்கப்பட்ட) திரு. சசிகுமார் அவர்களின் மகன் எனும் ஒரு நிரந்தர விலாசம்தான்.
நான் பிறப்பால் இன்னுமொரு தமிழ் பேசும் இந்தியன். என்னோடு பேச வாருங்கள்.
